மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேட்டி
ஓஎன்ஜிசி பழைய கிணற்றை பராமரிப்பது என்று துரப்பண பணியை இராஜகோபாலபுரத்தில் செய்கிறது வேலையை தடுக்க கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது இராஜகோபாலபுரம் இங்கு ஏற்கனவே ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலமாக அறிவித்த பிறகு புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க தடைசெய்யபட்டது.
மேலும் இருக்கின்ற கிணறுகளை பராமரிப்பு செய்ப மட்டுமே அரசு அனுமதித்துள்ளது. ஆனால் இராஜகோபாலபுரத்தில் உள்ள கிணற்றை பராமரிப்பு பணி என கூறி மிக பெரிய ஆழ்துளை போடும் இயந்திரங்களை கொண்டு இரவு நேரத்தில் பணி செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க கோரி அந்த கிராம மக்கள் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடமும் கோட்டாச்சியரிடமும் மனு அளித்ததின் பேரில் பணியின் உண்மை அறிக்கையை பெற்று தருவதாகவும் அதுவரை பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராஜகோபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி யினர் மீண்டும் துரப்பன பணி செய்வதை தடுத்து நிறுத்த கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கோட்டாச்சியர் விஷ்னு ப்ரியாவை சந்திந்து கோரிக்கை விடுத்தன்.


