in

திருப்பதி மலையில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி கருட வாகன புறப்பாடு

திருப்பதி மலையில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி கருட வாகன புறப்பாடு

திருப்பதி: கருட பஞ்சமி தினத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு இன்று இரவு கோவில் மாட வீதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கருட பஞ்சமி நாளில் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கருட பஞ்சமி விழாவையொட்டி இன்று இரவு சிறப்பு கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

இதையொட்டி, உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பிய நிலையில், ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோவில் நான்கு மாட வீதிகளிலும் கோலாகலமாக நடைபெற்றது.

மாட வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்து கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபட்டனர்.

கருட வாகன சேவையையொட்டி திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

What do you think?

மதுரையில் தவெக சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் கோலாகலமாக நிறைவடைந்த 5-வது ‘நெய்தல்’ கலைத் திருவிழா – கனிமொழி எம்.பி. பெருமிதம்