in

ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலயத்தில் அமாவாசை அபிஷேக ஆராதனை

ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலயத்தில் அமாவாசை அபிஷேக ஆராதனை

 

நாமக்கல் நடந்தை ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலயத்தில் அமாவாசை அபிஷேக ஆராதனைகள்.

நாமக்கல்மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் நடந்தை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆனி மாத அமாவாசையினை அபிஷேகத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

விழாவின் நிகழ்வாக மூலவர் பெரியகாண்டி அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்கள் ஆன பஞ்சாமிர்தம் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் குங்குமம் கரும்பு சாறு அரிசி மாவு சந்தனம் பன்னீர் மற்றும் கலச அபிஷேகங்கள் செய்து மூலவர் பெரியகாண்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மகாமுனி மற்றும் மாசி பெரியண்ண சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

545-ம் ஆண்டு குரு பூஜை அபிஷேக ஆராதனை

அருள்மிகு சந்தியப்பன் ஆலய திருவிழா மாவிளக்கு பூஜை