in

முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்

முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்

 

நாமக்கல் மோகனூர் சர்க்கரை ஆலை குடியிருப்பில் வள்ளி தேவசேனா முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவ நிகழ்வு.

​நாமக்கல் மாவட்டம் மோகனூர் சர்க்கரை ஆலை குடியிருப்பில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில், சிங்காரவேலன் – வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

​முருகப்பெருமான் வள்ளியைக் கரம் பிடித்த புண்ணிய தலம் சிக்கலில் நடைபெறும் இத்திருமண வைபவத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு. அதே போன்று மோகனூர் சர்க்கரை ஆலை குடியிருப்பில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகப் பெருமானுக்கு வருடம் தோறும் இந்த திருக்கல்யாண வைபவ நிகழ்வு அதே நாளில் இங்கு நடைபெறும் அதனை அதை முன்னிட்டு நேற்று இரவு முருகப்பெருமான் தேவியருடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் கோவில் வளாகத்தில் விநாயகர் வழிபாட்டுடன் ​திருக்கல்யாண உற்சவம் தொடர்ந்து நடைபெற்றது.

அப்போது காப்பு கட்டப்பட்டு பின்னர் மாலை மாற்றுதல் திருமாங்கல்ய தாரணம் அணிதல் உள்ளிட்ட திருமண நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அப்போது பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன கலந்து கொண்டவர்களுக்கு கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

அனல் மின் நிலைய செயல்பாடு குறித்து ஆய்வு