in

சிம்பு – விஜய் சேதுபதி கூட்டணிக்கு சிக்கலா..? அரசன் படத்தில் நடந்தது என்ன?

சிம்பு – விஜய் சேதுபதி கூட்டணிக்கு சிக்கலா..? அரசன் படத்தில் நடந்தது என்ன?

 

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது.

இந்நிலையில், விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் பரவின. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகியதாகக் கூறப்பட்டதால், சிம்பு – விஜய் சேதுபதி கூட்டணியில் சிக்கலா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என்றும், தான் படத்திலிருந்து விலகவில்லை என்றும் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். இதனால் ரசிகர்களின் குழப்பம் நீங்கியுள்ளதுடன், சிம்பு – விஜய் சேதுபதி கூட்டணியைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

What do you think?

ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றம் சொக்கப்பனை திருவிழாவு

முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் சிறையில் ஆய்வு