நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்!
தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை பருவகால பணியாளர்களைக் கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய வேண்டும் . இயக்க இழப்பீடு தொடர்பான இழப்பீடு தொகையை ஊழியர்கள் தலையில் சுமத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழக தழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


