தைவான் சிறையில் தவிக்கும் இளைஞர்: மீட்க பெற்றோர் மனு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் இவரது மகன் மணிகண்டன் ஐடிஐ முடித்துள்ளார் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள சுபி லைவ் டெக் என்ற நிறுவனத்தின் மூலம் தைவான் நாட்டிற்கு தக்காளி பேக்கிங் செய்வதற்கு ரூபாய் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படும் வேலைக்கு ஆள் தேவை என்றும் செய்திருந்த விளம்பரத்தை பார்த்து தனது மகனுக்கு வேலை கேட்டு அனுகியுள்ளார்
அப்போது சுபி லைவ் டெக்கில் வேலை பார்த்த சக்தி என்ற பெண் நிறுவன உரிமையாளர்களுக்கு தைவான் நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக 4 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து முத்துராமலிங்கம் தனது மகளின் நகையை அடகு வைத்து நாலு லட்சம் பணத்தை கட்டி உள்ளார் மேலும் தைவான் நாட்டில் சம்பளமாக ரூபாய் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வரை தருவார்கள் தங்குமிடம் மற்றும் உணவு கொடுத்து விடுவார்கள் என்று கூறி அனுப்பி உள்ளனர்
ஆனால் முறையான விசா பெறாமல் டூரிஸ்ட் விசா மூலம் மணிகண்டனை சம்பந்தப்பட்ட சுபி லைவ் டெக்நிறுவனம் அனுப்பி உள்ளது மேலும் அங்கே எந்த வேலையும் கொடுக்காமல் சம்பளமும் கொடுக்காமல் ஏமாற்றி இருந்துள்ளனர்
இதில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் பசியும் பட்டினியமாக சுற்றித்திரிந்து இருந்துள்ளார் மேலும் அங்கு கிடைத்த இடத்தில் தங்கி இருந்துள்ளார்
இந்த நிலையில் தைவான் அரசாங்கம் உரிய அனுமதி விசா இல்லாமல் தங்கியதாக இளைஞர் மணிகண்டனை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்து தைவான் சிறையில் அடைத்துள்ளது
இதைத்தொடர்ந்து தனது மகனை மீட்டு தர தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தைவான் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சுபி லைவ் டெக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் பேட்டி முத்துராமலிங்கம் தைவான் நாட்டு சிறையில் தவிக்கும் மணிகண்டன் தந்தை


