in

பழனி முருகன் கோயிலில் ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

பழனி முருகன் கோயிலில் ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

இந்நிலையில், தமிழக அரசு முதன்மை கோயில்களில் ஆன்லைன் சேவைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பழனி முருகன் கோயிலில் கால பூஜைகளில் பங்கேற்பதற்கும், மின்இழுவை ரயில் (வின்ச்) பயணத்திற்குமான ஆன்லைன் முன்பதிவு வசதி சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது.

​அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது ரோப்காரில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தேர்வு செய்து, ஒரு நபருக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் சென்று வர 100 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

​இந்த ஆன்லைன் முன்பதிவு மூலம், நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 50 பேரும் என முதற்கட்டமாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
​இதற்கிடையே, கோயிலில் தினசரி நடைபெறும் 6 கால பூஜைகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு வசதியும் தற்பொழுது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட கால பூஜைக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே தற்பொழுது பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

What do you think?

என்எல்சி இயந்திரம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா