in

திருக்கார்த்திகை தீப திருவிழா துர்கையம்மன் உற்சவம்

திருக்கார்த்திகை தீப திருவிழா துர்கையம்மன் உற்சவம்

 

ஊர் காவல் தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் கோலாகலமாக துவங்கிய திருக்கார்த்திகை தீப திருவிழா……திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்கி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீப திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வருகின்ற 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது .

இந்த ஆண்டு திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று ஊர் காவல் தெய்வமான துர்ககையம்மன் உற்சவத்துடன் கோலாகலமாக துவங்கியது. திருவண்ணாமலை மாநகரம் சின்ன கடை வீதியில் உள்ள ஊர் காவல் தெய்வமான துர்கையம்மன் ஆலயத்தில் முன்னதாக துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆலங்காரங்கள் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் துர்கையம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து நாளை இரவு அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோவில் காவல் தெய்வமான பிடாரியம்மன் உற்சவம் மாட வீதியுலா நடைபெறும். வருகின்ற 15ம் தேதி காலையில் 6 மணி முதல் 7.30க்குள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.

What do you think?

குரு விழாயக்கிழமை சிறப்புபூஜை ஆர்த்தி

மாமுனிகளின் திருஅவதாரஉற்சவத் திருவிழா