in

ஜெயிலர் படம் பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி!

ஜெயிலர் படம் பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்த முதல்வர் ரங்கசாமி!

 

“தியேட்டரில் ஒலி அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்” என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 361 மகளிர் பணியாளர்களுக்கு ரூ.12 கோடியே 45 லட்சத்து 52 ஆயிரத்து 961 பணிக்கொடையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து உடனிருந்தார்.

மேலும், தற்போது பணியில் உள்ள 1,200 மகளிர் பணியாளர்களின் பணிக்கொடை காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.16 கோடியே 95 லட்சத்து 52 ஆயிரத்து 961 மதிப்பிலான பணிக்கொடை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்கள், கடைசியாக எப்போது திரைப்படம் பார்த்தீர்கள் எனக் கேட்டதற்கு, கடைசியாக விஜய் நடித்த படத்தைப் பார்த்ததாகவும், தற்போது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தைப் பார்த்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தியேட்டரில் ஒலி அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அழைத்ததால் படம் பார்க்கச் சென்றதாகவும் அவர் கூறினார்.

What do you think?

ஸ்ரீ சாய் பாபா சுவாமி திருக்கோவில் சிறப்பு பூஜை