in

மயிலம் ஸ்ரீ முருகன் கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு! 

மயிலம் ஸ்ரீ முருகன் கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு! 

மயிலம் ஸ்ரீ முருகன் திருக்கோயிலில், ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி நாக வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

       

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்கக்கவசத்தில் ரம்யமாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து மகாதீபாரதனை,சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம்,பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன.

உட்பிரகாரம் வந்து வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மலை மேல் வெள்ளி நாக வாகனத்தில் மலையை வலம் வந்து அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்! சிசிடிவி காட்சி வெளியீடு 

சீர்காழி அருகே பரபரப்பு: பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உட்பட 7 பேரை மீது கதண்டு வண்டுகள் தாக்குதல் – அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை