in

கும்பகோணம் அருகே ஒரே நாள் சிறிய மழையால் 500 ஏக்கர் சம்பா நடவு மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை

கும்பகோணம் அருகே ஒரே நாள் சிறிய மழையால் 500 ஏக்கர் சம்பா நடவு மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீராக்கண், கடமங்குடி, கூத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு பெய்த சிறிய மழையில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சம்பா நடவு பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததுமே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட காரணம் என வேதனை தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

Casino Test App – Die ultimative Anleitung für Spieler

சங்கரன்கோவில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம்