in

மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

 

சுகாதார அலுவலர் பெயர் மாற்றம்: நாகப்பட்டினத்தில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், ஆட்சியரிடம் மனு;

​இடைநிலை சுகாதார அலுவலர் பணியிடத்தை ‘சமூக சுகாதார அலுவலர்’ என பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டினத்தில் சுகாதார செவிலியர்கள் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

​சுகாதாரத்துறையில் கிராம சுகாதார செவிலியர், பகுதி செவிலியர், சமுதாய சுகாதார செவிலியர் என பல்வேறு பதவிகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், இடைநிலை சுகாதார அலுவலர் பணியை ‘சமூக சுகாதார அலுவலர்’ என பெயர் மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால் தங்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனச் செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

​இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற செவிலியர்கள், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

சிறிய மழைக்கே தாங்காத சாலைகள்! பெருமழை பெய்தால் என்ன ஆகும்?

நாமக்கல் ஸ்ரீ ராஜேஸ்வரி மடாலயத்தில் லலிதா சகஸ்ரநாம யாகம்!