🏥 திருவாடானையில் ரூ.3.95 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு!
திருவாடானையில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையங்களை அமைச்சர் டாக்டர் ராஜீவ் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தலைமை அரசு மருத்துவமனைக்குக் கூடுதல் கட்டிடமாக ரூபாய் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் ராஜீவ் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, அச்சங்குடி ஊராட்சி கட்டிடம் மற்றும் தொண்டி பேரூராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


