in

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவிலில், ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றன.

விழாவையொட்டி, விநாயகப் பெருமானுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு புனித திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை வேள்வி நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பின்னர், 108 சங்காபிஷேகம் மற்றும் கலச நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி விஷ்ணு கணபதியாக அருள்பாலித்தார். பின்னர் உட்பிரகாரத்தில் உலா வந்து, பக்தர்களின் “ஓம் விநாயகா போற்றி” என்ற பக்தி முழக்கங்களுக்கிடையே ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சுயம்பு பொய்யாமொழி விநாயகப் பெருமானை தரிசித்து அருளாசி பெற்றனர். விழா நிறைவில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

ஆதரவற்றோரின் முகத்தில் புன்னகையை வரவழைத்து நெகிழ்ச்சி

ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்! பத்திரத்தை வழங்க மறுப்பதாகப் புகார்!