தஞ்சை டைடல் பூங்காவில் இருந்து துவங்கிய மாரத்தான்
மூன்று மணிக்கு எவன் எழுந்திருக்கிறானோ அவன் விளங்காமல் போனதாக சரித்திரம் கிடையாது
சாதாரண பழைய சாதம் சாப்பிட்டால் போதும் போதையில் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது
நம்ம ஆளுங்க 7 மணிக்கு எந்திரிக்க முடியாது போறதே ஆறு மணிக்கு அப்புறம் எங்க எழுந்திருக்கிறது
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்கள்
என இப்படி பேசி அட்வைஸ் செய்தது தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டியன் தான்.
போதையில்லா வல்லம் விழிப்புணர்வு ஓட்டம் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்றது
தஞ்சை டைடல் பூங்காவில் இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த ஓட்டத்தில் காவல்துறையினர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினரின் குழந்தைகள் கலந்து கொண்டு ஓடினர்


