ப்ரோமோஷன் வீடியோ சோஷியல் மீடியால ‘ஹாட் டாபிக்’!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் கூட சேர்ந்து நடிச்சிருக்கற தெலுங்கு படம் ‘மன சங்கரவரபிரசாத் காரு’.
அனில் ரவிபுடி இயக்கத்துல வர்ற இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகுது. ஆனா இப்போ படத்த விட நயன்தாராவோட ஒரு ப்ரோமோஷன் வீடியோ தான் சோஷியல் மீடியால ‘ஹாட் டாபிக்’!
பொதுவா நயன்தாரா தான் நடிச்ச படங்களுக்கு ப்ரோமோஷனுக்கு வரமாட்டாருங்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். இதை வச்சே அந்த படக்குழு ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணிருக்காங்க.
அதுல நயன்தாராவே டைரக்டர் கிட்ட போய், “என்ன சார், இந்த படத்துக்கு ப்ரோமோஷனே இல்லையா?“னு கேக்குற மாதிரி ஒரு சீன் இருக்கு. இதை பார்த்தது தான் நம்ம ஊரு ரசிகர்களுக்கு “பத்திகிச்சு”!
பாலிவுட்ல கூட வரல: ஷாருக்கான் கூட ‘ஜவான்’ படத்துல நடிச்சப்போ கூட நயன் ப்ரோமோஷனுக்கு வரல. ஆனா தெலுங்கு படத்துக்கு மட்டும் அவரே போய் கேக்குறாரு.
“தமிழ் படங்கள்ல நடிக்கும்போது மட்டும் வரமாட்டேங்குறீங்க, ஆனா அங்க மட்டும் அதிகமா சம்பளம் தர்றாங்கன்ன உடனே ப்ரோமோஷன் பண்றீங்களா?”னு ரசிகர்கள் கேள்வி எழுப்பிட்டு இருக்காங்க.
தமிழகத்துல நயன்தாரா இப்போ முன்னாடி மாதிரி இல்ல, அவரோட மார்க்கெட் குறையுறதுனால தான் இப்போ இப்படி பண்றாருனு சில பேர் விமர்சனம் பண்றாங்க.
இன்னொரு பக்கம் நயன் ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னா, “2026 ஆரம்பிச்ச உடனே எங்க தலைவியோட புகழை பார்த்து வயித்தெரிச்சல்ல கதறுறாங்க. அவர் தமிழ்ல மட்டும் இல்ல, தெலுங்குலயும் சூப்பர் ஸ்டார் தான்.
நயன்தாரா வெறும் மனுஷி இல்ல, அவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்'”னு கெத்தா பதில் சொல்லிட்டு இருக்காங்க.
படம் சங்கராந்திக்கு ரிலீஸ் ஆகுதோ இல்லையோ, அதுக்கு முன்னாடியே நயன்தாரா மேல இருக்கிற இந்த விவாதம் சோஷியல் மீடியாவை அதிர வச்சிட்டு இருக்கு!