in

ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்

ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்

 

பிரம்மதேசம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரமம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் இத்திருக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்தது. அதனை தொடா்ந்து கடந்த 6ம் தேதி காலை மங்கள இசை, பகவத் பிராா்த்ததனை எஜமானவா்ணம் மகா ஸங்கல்பம் அனுக்கை விஷ்வக்சேன ஆராதனத்துடன் கும்பாபிஷேக பணிகள் ஆரம்பமாயிற்று. தொடா்ந்து தாமிரபரணி நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு கலாகா்ஷணம் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து காலை மாலை இரு வேளைகளிலும் நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமாக இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நித்ய ஆராதனத்துடன் துவங்கின. முன்னதாக நேற்று பிம்பசுத்தி விமான சுத்தி சப்த கலச ஸ்நபனம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் போன்றவைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான இன்று காலை ரக்ஷாபந்தனம் ஸ்நபனம் பிரதான ஹோமங்கள் நடைபெற்று மகா பூா்ணாகுதியானது நடைபெற்றத. தொடா்ந்து யாத்ராதானம் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

காலை 6.03 – 6.45 க்குள் மணிக்குள் விமான கலசம் அதனை தொடா்ந்து மூலவா் மற்றும் பாிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து விசேஷ ஆராதனம் சாற்றுமறை ப்ரம்மகோஷம் ஆச்சாாியாள். கிராம மாியாதை தீா்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மஹாஜனங்கள் செய்திருந்தனா்.

What do you think?

செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் கார்த்திகை திருவாதிரை அபிஷேகம்

Roulette Strategien mit Jackpots: Tipps und Tricks für den großen Gewinn