in

சிதம்பரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சேதம்,

சிதம்பரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சேதம்,

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கே குடிநீர் வழங்கும் பணி நிறைவு பெற்ற நிலையில். வடக்கு ரத வீதியில் அதிகாலையில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலைகளில் வீணாக ஓடியது.

கோடை காலம் துவங்க உள்ள நிலையில் பல லட்சம் லிட்டர் குடினீர் வீணாக சாலையில் ஓடியதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நகராட்சி ஊழியர்களும் கேட்டபோது நேற்று வடக்கு ரத வீதி பகுதியில் மின்சாரத்துறை அதிகாரிகள் பணிகள் மேற்கொண்டதாகவும் அப்போது பைப் லைன் சேதமாக இருக்கலாம் எனவும் அதனை கண்டு கொள்ளாமல் அவர்கள் சென்ற நிலையில் காலையில் தண்ணீர் வாழ்வதற்கு திறந்த போது குடிநீர் முழுவதும் சாலைகளில் ஓடியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே அலட்சியமாக செயல்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

What do you think?

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்