அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலைகட்டிய மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கோ.சத்திரம் அரசு தொடக்க பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடபட்டது.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக கோ.சத்திரம் கிராமத்தில் தொடங்கபட்ட அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா தற்பொழுது நூறு ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு நூற்றாண்டு விழா மற்றும் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சிறப்பான முறையில் மாணவ மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

மேலும் நிகழ்ச்சியின் முன்னதாக தனித்திறன் போட்டிகளிலும், குழு போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கி கவுரவித்தனர்.
இந்த நூற்றாண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..


