in ,

நம்பெருமாள் (பகல் பத்து) 10 ஆம் நாளில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரம்

நம்பெருமாள் (பகல் பத்து) 10 ஆம் நாளில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரம்

 

நம்பெருமாள்  (பகல் பத்து) 10 ஆம் நாளில் நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்) சௌரிக் சாயக் கொண்டை சாற்றி;

அதில் கலிங்கத்துராய், சூர்ய – சந்திர வில்லை ; சிகப்பு கல் நெற்றி பட்டை ; முத்து பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து காதில் வைர மாட்டல் – தோடு – ஜிமிக்கி ;

வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து; திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம்; தாயார் வைரத்திருமாங்ஙல்யம் ; தொங்கல் பதக்கம்;

வரிசையாக அடுக்கு பதக்கங்கள்; பெரிய பவழ மாலை; காசு மாலை; 2 வட‌முத்து மாலை; வலது திருக்கையில் – தங்க கோலக்கிளி ;

இடது திருக்கையில் – வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு , வில்வ பத்ர தொங்கல் சாற்றி; திருவடியில் – சதங்கை , தண்டை அணிந்து ;

பின் சேவையாக – பின்னல் ஜடை – அதன்மேல் ஜடை தாண்டா; திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி; ஜடைக்கு மேல் – நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா; புஜ கீர்த்தி;

கச்சு எடுத்து கட்டி – அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு; ரங்கூன் அட்டிகை; ஒட்டியாணம் அணிந்து;

வெண் பட்டு அணிந்து – வலது திருவடியை மடித்து அமர்ந்தும்- இடது திருவடியை , திருக்கை தாங்க அமர்ந்தும் அதி அற்புதமாக நாச்சியாரக சேவை சாத்திக்கிறார் ரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து;

சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து;

இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி;

சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் சாற்றி; காசு மாலை, 2 வட முத்து மாலை அணிந்து;

மாந்துளிர் வர்ண பட்டு அணிந்து; பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்க்ஷி ; புஜ கீர்த்தி; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாதிக்கிறார்.

What do you think?

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்

Mobile Betting in Zambia: A Comprehensive Guide