in

செல்வ விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் ஒரு லட்சம் விளக்கேற்றி தீப வழிபாடு செய்தனர்

செஞ்சி காந்தி பஜார் செல்வ விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் ஒரு லட்சம் விளக்கேற்றி தீப வழிபாடு செய்தனர்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.சித்திரை 1-ஆம் தேதி பராபவ வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குப் பட்ட காந்தி பஜாரில் அமைந்துள்ள லட்சதீப ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 79 -ஆம் ஆண்டு இலட்ச தீப திருவிழாவில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்ச தீப திருவிழா செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விளக்கேற்றி நீண்ட வரிசையில் இன்று வழிபாடுகள் செய்தனர்.

முன்னதாக அதிகாலை மூலவர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பால்,தயிர் பன்னீர்,விபூதி இளநீர்,போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது

சித்திரை மாத முதல் தேதி லட்சதீப திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் கண் கவரும் வண்ண மின்விளக்கு அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.

மேலும் செஞ்சி பேரூராட்சியில் முக்கிய வீதியில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் செஞ்சி போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

What do you think?

மரக்காணத்தில் சாந்த சொரூப ஆஞ்சநேயர் கோயில் லட்சதீப விழா

பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்