சீரடி சாய்பாபா ஆலயத்தில்கார்த்திகை தீபத் திருவிழா
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு 10008 தீபங்களில் மத நல்லிணக்க வடிவங்கள் அமைத்து திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா ஆலயத்தில்கார்த்திகை தீபத் திருவிழா.

திண்டுக்கல் நாகல் நகர் அருகே அமைந்த பாரதிபுரத்தில் சீரடி சாய்பாபா ஆலயம் பல ஆண்டுகளாக பக்தர்களால் வழி நடத்தப்படுகிறது.
வருடம் தோறும் சீரடி சாய்பாபா ஆலயத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திண்டுக்கல் நகர் பகுதியில் சார்ந்த ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதை போல் 10 ஆயிரத்து எட்டு அகல் விளக்குகளைக் கொண்டு மூன்று மத வழிபாட்டு சின்னங்களான கோவில் கோபுரம் சிலுவை நிலா பிறை ஆகியவை அகல் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டு தீபம் ஏற்றி கார்த்திகை மாத தீபத் திருவிழாவை கொண்டாடினர்.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று அகல்விளக்குகளை ஏற்றினார் எம்மதமும் சம்மதம் என்ற உணர்வோடு சீரடி சாய்பாபா ஆலயத்தில் வழிபாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த வழிபாடு முடிந்ததை அடுத்து வந்திருந்த அனைத்து பொதுமக்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டினை சீரடி சாய்பாபா ஆலய நிர்வாகி சாய் முருகன் செய்திருந்தார்.


