புனித நீராடி சாமி தரிசனம் செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார் முன்னதாக அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் தொழிலதிபர்கள், முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களில் லோகேஷ் கனகராஜ் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்திற்கு 18 பேர் கொண்ட குழுவாக வந்திருந்த லோகேஷ் கனகராஜ் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர்.
அதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் 21 புண்ணிய தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார் அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு லோகேஷ் கனகராஜ் வந்திருந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் பலர் கோயில் வளாகத்திற்கு அவரை காண வந்தனர்.
