in

கோயில் குத்தகை நிலங்களை மீட்டதாக பதாகை வைத்த விவகாரம்

கோயில் குத்தகை நிலங்களை மீட்டதாக பதாகை வைத்த விவகாரம்

 

சிதம்பரம் அருகே கோயில் குத்தகை நிலங்களை மீட்டதாக பதாகை வைத்த விவகாரம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தலித் சமூக மக்கள் குத்தகை வைத்த நிலங்களில் அறிவிப்பு பலகை வைத்திருப்பதாக குற்றச்சாட்டு. அறிவிப்பு பலகையை பிடுங்கி எறிந்தனர். போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு.

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் கோதண்டராமசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 28 ஏக்கர் நிலத்தை கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் செய்யப்பட்டதாகவும், இந்த இடத்தில் யாரும் அத்துமீறி பிரவேசிக்க கூடாது என டிரஸ்ட் பெயரில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி தலைமையில் நேற்று சிதம்பரம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், தலித் சமூகத்தினர் குத்தகை வைத்த நிலங்கள் மீட்கப்பட்டதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி தலைமையில் பின்னத்தூர் கிராமத்திற்குச் சென்ற கட்சியினர், அங்கு பதாகை வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மாவட்ட செயலாளர் அந்தப் பகுதி மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர்கள் இருவர் திடீரென சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை பிரித்து எறிந்தனர். பின்னர் அனைவரும் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி.

பின்னத்தூர் கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை செய்யப்பட்ட நிலங்களை மறு ஏலம் விடப்போவதாக கூறுகிறார்கள். தலித் சமூகத்தினர் குத்தகை வைக்கும் நிலங்களை வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாரைவாக்க நினைக்கிறார்கள். இந்த நிலங்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் வருகிற திங்கட்கிழமை கடலூரில் போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

What do you think?

16அடி நீள அலகைக் குத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பெண் பக்தர்.

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவம்.