in

நட்சத்திர கோவில் முருகன் சன்னதியில் கிருத்திகை வழிபாடு

நட்சத்திர கோவில் முருகன் சன்னதியில் கிருத்திகை வழிபாடு

 

கிருத்திகை முன்னிட்டு ஏராளமானோர் முருகன் சன்னதியில் வழிபாடு…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சுயம்பு சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இது முருகப்பெருமான் லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கும் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் பொதுவான பரிகாரத் தலம் என்று கருதப்படுகிறது.

இங்குள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி உலகில் வேறெங்கும் இல்லாதபடி சுயம்பு லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் வழிப்பட்ட தலம் என்பதால் இது நட்சத்திர கிரி அல்லது நட்சத்திர கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இன்று கிருத்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:30 மணியளவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பிறகு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று கிருத்திகை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

What do you think?

 கோ.ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை துவக்கம்

அருள்மிகு பெரியாண்டச்சி அம்மன் திருக்கோவில் பெளர்ணமி பூஜை