கோ.ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை துவக்கம்
கூரை புடவை உட்பட புதிய வடிவமைப்புடன் கூடிய காஞ்சிபுரம் ஆரணி திருபுவனம் பட்டு புடவைகள் கோ.ஆப் டெக்சில் தீபாவளி விற்பனைக்காக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் அமைந்துள்ளது தமிழ்நாடு அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ.ஆப் டெக்சில் தீபாவளியை முன்னிட்டு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திருபுவனம் ஆரணி காஞ்சிபுரம் மற்றும் கூரை பட்டு சேலைகள் பருத்தி ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 91 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கோ.ஆப் டெக்சில் மயிலாடுதுறை பிரிவில் ரூ74.50 லட்சமும் சீர்காழி பிரிவில் ரூ27.50 லட்சம் வியாபார இலக்காக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம் மயிலாடுதுறை விற்பனை நிலைய பொருப்பாளர்கள் மதன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


