தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான பயணிகள் முன்கூட்டியே சொந்த ஊர் திரும்புவதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி புதுச்சேரியில் ரயில் மூலம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்கள் கடத்தப்படுவதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வருபவர்கள் சொந்த ஊரான புதுச்சேரிக்கு திரும்பி வருகின்றனர்.
மேலும் வடமாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருவதால் ரயில்களில் பயணம் செய்பவரின் எண்ணிக்கையானது அதிகரித்தே காணப்படுகிறது.
இதனை சாதகமாக பயன்படுத்தி ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இன்று திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ஒதியன்சாலை போலீசரும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் போதை வஸ்துக்கள் கடத்தப்பட்டு வருகிறதா? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் ரயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் உடைமைகள், கைப்பைகள் என அனைத்தையும் முழுவதுமாக சோதனை சோதனை செய்த பிறகே பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் அச்சமடைந்தனர்.
மேலும் போலீசார் ரயில் நிலையம் முழுவதும் தொடர்ந்து சோதனை ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அதிரடி சோதனையில் போதைப் பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

