in

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம்

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம்

 

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.20 கோடியை தாண்டியது: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்:

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.20 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகள் கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ராமநாதசுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்பு கோவில் உள்பட உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் திறக்கப்பட்டது.

பின்னர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு இணை ஆணையர், உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சத்தி 44 ஆயிரம், தங்கம் 14 கிராம், வெள்ளி 1 கிலோ 405 கிராம், 191 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.

ராமநாதசாமி திருக்கோயிலில் பக்தரிடம் இருந்து பெறப்பட்ட உண்டியல் காணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 6ந் தேதி எண்ணப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

“கிரீன் மேஜிக் பிளஸ்” புதிய வகை பால் அறிமுகம்

நாகை – இலங்கை கப்பல் கட்டணம் குறைப்பு