மேல்மலையனூர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அமைச்சர் என். ஆனந்த் திருமண நாளையொட்டி தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம்.
கோயில் சன்னதியில் தரையில் படுத்தும், சூலத்தில் எலுமிச்சம் பழத்தை சொருகியும் மனமுருகி வழிபாடு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் திருத்தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தனது திருமண நாளையொட்டி தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம். மூலவர் மற்றும் உற்சவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து கோயில் சன்னதியில் தரையில் படுத்தும், சூலத்தில் எலுமிச்சம் பழத்தை சொருகியும் மனமுருகி வழிபாடு செய்தார்.

பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கியும்,கோயில் வெளிப்புறத்தில் த.வெ.க நிர்வாகிகளின் காரில் கட்சி கொடியை பொறுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்பொழுது வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் மேல்மலையனூர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

