in

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 62 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிகிறது

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 62 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிகிறது

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரை ஓரத்தில் அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது

இந்த நிலையில் 1964ம் ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய தரைப்பாலம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரை ஓரப்பகுதியில் கடல் சீற்றம் அடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதின் காரணமாக 62 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் புதைந்து இருந்த மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியில் நீரோட்டம் செல்வதற்காக அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடல் அலையில் இருந்து மண் அரிப்பு ஏற்பட்டு மெல்லமெல்ல வெளியே தெரிந்திருக்கிறது.

இதனை தனுஷ்கோடிக்கு சுற்றி பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

What do you think?

பள்ளி மாணவியின் துயர முடிவு: செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் விபரீதம்

கும்பகோணத்தில் அம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா