விஜய் சேதுபதி! ‘காந்தி டாக்ஸ்’ அனல் பறக்குது! பேசா மொழி படம்!! ஒரு புது முயற்சி! இதயம் பேசும் மொழி
வசனமே இல்லாத ‘காந்தி டாக்ஸ்’: விஜய் சேதுபதி – ஏ.ஆர். ரஹ்மானின் மௌனப் புரட்சி!
வசனமே இல்லாம வெறும் மியூசிக்ல மட்டும் ஒரு படம் வந்தா எப்படி இருக்கும்? அதுவும் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமின்னு ஒரு மாஸ் காம்போவுல!
அதுதான் இப்போ சோஷியல் மீடியாவுல டாக் ஆப் தி டவுனா இருக்குற ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks).
இதோ அந்தப் படத்தோட சுவாரஸ்யமான தகவல்கள்: நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஸ்டைலிஷ் வில்லன் அரவிந்த் சாமி, அப்புறம் அழகு தேவதை அதிதி ராவ் ஹைதரி.. இவங்க எல்லாரும் ஒண்ணா நடிச்சிருக்காங்க.
ஆனா ஹைலைட் என்னன்னா, படத்துல இவங்க ஒருத்தர் கூட ஒரு வசனம் கூட பேசமாட்டாங்க! இது ஒரு முழுள “சைலண்ட்” (Silent Movie) நீ திரைப்படம்.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இந்தப் படத்தை இயக்கியிருக்காரு. வசனங்களே இல்லாததுனால, நடிகர்களோட முகபாவனைகளும் (Expressions), உடல் மொழியும் தான் படத்தோட கதை சொல்லும்.
வசனமே இல்லன்னா அப்புறம் எப்படி? அங்கதான் நம்ம ஏ.ஆர். ரஹ்மான் வர்றாரு. படத்தோட ஆன்மாவே அவரோட மியூசிக் தான். வசனம் செய்ய வேண்டிய வேலையை ரஹ்மானோட பின்னணி இசை செமயா பண்ணிருக்கு.
டிரைலர்ல வர்ற ஒவ்வொரு பிஜிஎம்-மும் (BGM) புல்லரிக்க வைக்குது.
இந்தப் படம் 2023-லேயே கோவாவுல நடந்த இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல போட்டு காமிச்சு எல்லாரோட பாராட்டையும் வாங்கிருச்சு. ஆனா ஏதோ சில காரணங்களால தியேட்டர்ல ரிலீஸ் ஆகுறது தள்ளிப்போயிட்டே இருந்துச்சு.
இப்போ 2 வருஷம் கழிச்சு ஒரு வழியா தியேட்டருக்கு வரத் தயாராயிடுச்சு சும்மா கமர்ஷியல் படங்கள் மட்டும் எடுக்காம, இப்படி ஒரு எக்ஸ்பெரிமெண்டல் (Experimental) படம் பண்றது சாதாரண விஷயம் இல்ல.
அதனாலதான் 2026-ம் வருஷத்தோட ரொம்ப முக்கியமான சினிமா முயற்சியாவோ, ஒரு வரலாற்றுப் பதிவாவோ இந்தப் படம் இருக்கும்னு சினிமா வட்டாரத்துல பேசுறாங்க.


