in

யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரம் கலைக்கல்லூரியில் இரு மாணவிகளுக்கு திருமூலர் விருது

யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரம் கலைக்கல்லூரியில் இரு மாணவிகளுக்கு திருமூலர் விருது.

 

உலக யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீன கல்லூரியில்
ஸ்ரீமத் சிவகுருநாதத் தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மயிலாடுதுறையில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரம் கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் சாமிநாதன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வதாண்யேஸ்வரர் தேவஸ்தான கட்டளை தம்பிநான் ஸ்ரீமத் சிவகுருநாதத் தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி, பின்னர் யோகா கலையில் சிறந்து விளங்கும் தீபிகா தன்ஷிகா மாணவிகளுக்கு திருமூலர் விருது வழங்கினார்.

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் செயலாளர் செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினார். உடன் கல்லூரி கல்வி குழு உறுப்பினர் சிவராமன், வாழும் கலை பயிற்சி முத்துக்குமார், நிகழ்ச்சியின் நிறைவாக துரைகார்த்திகேயன் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.

இதில் ஏராளமான ஆசிரியர்கள் மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

What do you think?

ஸ்ரீ கமல சாய்பாபா ஆலயத்தில் 23ஆம் ஆண்டு 108 கலசபிஷேக விழா

தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரி