ஸ்ரீ கமல சாய்பாபா ஆலயத்தில் 23ஆம் ஆண்டு 108 கலசபிஷேக விழா.
புதுச்சேரி காலப்பட்டு ஸ்ரீ கமல சாய்பாபா ஆலயத்தில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு 108 கலசபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி காலப்பட்டு ஸ்ரீ கமல சாயிபாபா ஆலயம் ஸ்ரீ சீரடி சாயி பாபா பிரார்த்தனை மண்டப 23-வது ஆண்டு விழா மற்றும் 108 கலச அபிஷேக விழா கொடியேற்றத்துடன் 19ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து ஸ்ரீ கமல சாய்பாபாவிற்கு ஆரத்தி அன்னதானம் மற்றும் கோபூஜை நடைபெற்றது.
மேலும் வடுக பூஜை சுவாசினி பூஜை, கன்யா பூஜை அமங்கலி பூஜை.
தம்பதி பூஜை, குரு பூஜை தொடர்ந்து
முதற்கால யாக சாலை பூஜை தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மற்றும் இரண்டாம் நிலை கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கடம் புறப்பாடு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது இதில் மித்திரலான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஸ்ரீகமல சாய் பாபாவிற்கு ஆரத்தி மற்றும் அன்னதானங்கள் சிறப்பாக நடைபெற்றது.