நன்றி சொல்ல சரிய தருணம் இதுதான்… லோகி ..யின் உருகமான பதிவு
ரஜினிகாந்த் நடிப்பில் தனது பிரமாண்ட வெளியீடான கூலி படத்தின் விளம்பரப் பணிகளில் மும்முரமாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தன்னுடன் அடிக்கடி இணைந்து பணியாற்றும் ஸ்டண்ட் மற்றும் நடன இயக்குனரான அன்பரிவ்-க்கு நன்றி தெரிவித்து x தளத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவிப்பதற்கு இது தான் சரியான தருணம் என்று கூறிய லோகேஷ், திரை பயணத்தை தொடங்கிய முதல் நாளிலிருந்தே இவர் தனது வாழ்க்கையின் “தூண்கள்” என்று பாராட்டினார்.
தான் வாழ்க்கையில் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவருக்கு மிக பெரிய ” பங்கு” இருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரத்திலிருந்து, மாஸ்டர் (2021) தவிர, ஒவ்வொரு படத்திலும்’ அன்பரிவ் ஸ்டண்ட், இயக்குனராக இருந்துள்ளார்.
கூலி..யிலும் இணைந்துள்ளார், அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் நீங்கள் இயக்குநர்..ராக முன்னேறுவதைக் காண நான் காத்திருகின்றேன்.
தற்போது அனைவரின் பார்வையும் அன்பரிவ் பக்கம் திரும்பியுள்ளது ஏனெனில் லோகேஷ் முந்தைய நேர்காணலில், கூலி படத்தின் சண்டைக்காட்சிகலில் எந்த சமரசமும் இருக்காது என்று கூறினார்.
36 வருடங்களில் A சான்றிதழ் பெற்ற ரஜினிகாந்தின் முதல் படம் கூலி என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நாடுகளில் தணிக்கை வாரியங்கள் படத்திற்கு UA சான்றிதழ் கொடுத்தாலும் , வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்தியாவில் மட்டும் ‘A’. certificate கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் UA பெறுவதற்கு காட்சிகளை மங்கலாக்கியிருக்கலாம் அல்லது ட்ரிம் செய்திருக்கலாம் …(ஆனால் லோகி படம்…னாளே ரத்தம் தெரிக்கனுமே… ) collection கம்மியாக வாய்ப்பிருப்பதால் ரசிகர்கள் ஐடியா நல்லா இருக்கே follow பண்ணலாமே… இன்னு சிலரும் . வன்முறைக்காக அல்ல, வேறு ஏதோ காரணத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்… அந்த காரணம் என்னவாக இருக்கும்???? ..இன்னு Comments செய்திருகின்றனர்….


