in

தென் மேற்கு பருவ மழை மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

தென் மேற்கு பருவ மழை மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 

தஞ்சாவூரில் தென் மேற்கு பருவ மழைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.

தென் மேற்கு பருவ மழையையொட்டி, பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ஆப்தமித்ரா நிதியின் மூலம் மோட்டாருடன் கூடிய ஒரு பைபர் படகு, 32 லைப் ஜாக்கெட், 12 சோலார் டார்ச் லைட், 12 பாதுகாப்பு கையுறைகள், 26 நைலான் கயிறுகள், 30 தீயணைப்பான் கருவிகள், 6 ஸ்ட்ரெச்சர்கள், 16 பாதுகாப்பு கண்ணாடிகள், 4 நீட்டிப்பு ஏணிகள், 2 ஏணிகள், 4 ஜெயின் ஷா, 1 பைபர் படகு, 10 பாம்பு பிடிக்கும் கருவிகள், 20 முகக்கவசங்கள் உட்பட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மீட்புப்பணி உபகரணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

இவற்றை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்து, மீட்பு பணிகளுக்காக தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமாரிடம் வழங்கினார்.

What do you think?

அரசுப் பேருந்து பின்பக்க டயரில் இருந்து புகை வந்ததால் நடுவழியில் நிறுத்தம்

மின்சாரம் தாக்கி காயமடைந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு