in

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கம்பம்ஊன்றி காப்பு கட்டி தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கம்பம்ஊன்றி காப்பு கட்டி தொடங்கியது.

கோவில் பின்புறம் உள்ள சிங்கார பாறையில் உள்ள பாலியில் நீராடப்பட்டு கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு நடப்பட்டு கோவில் திருவிழா தொடங்கியது, தொடர்ந்து வருகின்ற 5ஆம் தேதி முதல் தினசரி இரவு சுவாமி திரு வீதி உலா நடைபெறும், 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடிசோறு பூஜையும்.12 ந் தேதி திங்கட்கிழமை அதிகாலை 3மணிக்கு மாவிளக்குபூஜை நடைபெற்று, கோவில் முன்பு தீ குண்டம் அமைக்கப்பட்டு பக்தர்கள் பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் புனித நீராடி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள், தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு உருளு தாண்டம், அக்னி சக்தி எடுத்தல், அழகு குத்துதல். கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை கோவில சுற்றி வருதல், உருவார பொம்மை எடுத்து வருதல் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து சுவாமியை வழிபடுவார்கள்.

13 ந் தேதி செவ்வாய்கிழமை காலை பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மாலை சுவாமி தேரில் திருவீதி உலா நடைபெறும், புதன்கிழமை மாலை 4 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் இந்து சமய அறநிலைய துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்கள்

What do you think?

நாமக்கல் மோகனூர் ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு ஸ்ரீ ராகவேந்திரருக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரம்