ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயிலில் கருங்கல்லாலான நிலப்படி வாசக்கால் வைக்கும் நிகழ்வு
புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீ ஹரிஹர புத்திரர் சேவா சங்கம் சார்பில் அரும்பார்த்தபுரத்தில் இருந்து கொம்பாக்கம் செல்லும் வழியில் டி.ஆர்.டி.ஏ அவென்யூ புதுமை நகரில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயிலில் கருங்கல்லாலான நிலப்படி வாசக்கால் வைக்கும் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீ ஹரிஹர புத்திரர் சேவா சங்கம் சார்பில் அரும்பார்த்தபுரத்தில் இருந்து கொம்பாக்கம் செல்லும் வழியில் டி.ஆர்.டி.ஏ அவென்யூ புதுமை நகரில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயிலில் கருங்கல்லாலான நிலப்படி வாசக்கால் வைக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, கருங்கால் நிலப்படி சுத்தி பூஜை நடத்தப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான கருங்கல்லாலான வாசக்கால் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மஞ்சளால் செய்து வைக்கப்படவுள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சங்க தலைவர் சுந்தர லட்சுமி நாராயணன், கௌரவ தலைவர் சம்பந்தம், பொதுச் செயலாளர் ஏழுமலை, ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆறுமுகம், சட்ட ஆலோசகர் கணேசன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


