in

மயிலாடுதுறை வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

மயிலாடுதுறை வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 

மயிலாடுதுறை வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவர் மதியழகன் தலைமையில் பொருளாளர் ரவிச்சந்திரன்,செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் மனிதவள பயிற்சியாளர் யுகாசரண் சிறப்புரையாற்றினார்.

ஆடிட்டர் பெர்ணார்டு, வக்கீல் ராஜ்மோகன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தினர். புதிய தலைவராக சீமாட்டி முகம்மதுரியாஜ், செயலாளராக பிரகதிசெந்தில், பொருளாளராக ரமேஷ்சந்த், துணைத்தலைவராக கிரிஜா,இணை செயலாளராக ஏஆர்சி ஸ்ரீகாந்த் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய பொறுப்பாளர்கள் ஏற்புரை வழங்கினர். தீவிபத்தில் பாதிக்கப்பட்ட சாமி டைலர் கடைக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.இதில் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகான வேண்டும், மாப்படுகை, நீடூர் ரயில்வேகேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடன் தொடங்க வேண்டும், புதிய பஸ்ஸ்டாண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும், நகரில் முக்கிய பகுதிகளில் ஒருவழிப்பாதையை போக்குவரத்து போலீசார் சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இணைச்செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். புதிய செயலாளர் பிரகதிசெந்தில் நன்றி கூறினார். இதில் திரளான வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

What do you think?

வினை தீர்த்த வேட்டை பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

புறக்கணிப்பது ஏன்? எங்களிடம் திறமை இல்லையா? தமனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்