in

மாணவச் செல்வங்களின் அன்பை ஏற்று பள்ளியில் ஆய்வு

மாணவச் செல்வங்களின் அன்பை ஏற்று பள்ளியில் ஆய்வு

 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இலுப்பைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவச் செல்வங்களின் அன்பை ஏற்று, பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்..

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் சீதனம் அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்ட நூலகத்தைத் திறந்துவைத்தார்..

இந்நிகழ்வில் சீதனம் அறக்கட்டளை செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.வெங்கடேஷ் கண்டியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மாதவன், பள்ளித் தலைமையாசிரியர் திரு.முருகானந்தம் ஆகியோரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். சீதனம் அறக்கட்டளை சார்பாக பள்ளிக்கு வழங்கப்பட்ட பேருந்தினையும் பார்வையிட்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்..

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காலை உணவு திட்டம் குறித்து ஆசிரியர்கள், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்…
அமைச்சரின் திடீர் வருகையால் மகிழ்ச்சி அடைந்த மாணவச் செல்வங்கள் உற்சாகத்துடன் இருபுறமும் நின்று கைகளை தட்டி வரவேற்றனர்..

What do you think?

தற்காப்பு கலை மற்றும் வீர விளையாட்டு கச்சையைக்கட்டு தேர்வு விழா

மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் இயக்குனர் பேட்டி