ரீமேக் படங்கள் தான் ஆட்சி செய்ய நிதி கொடுகிறது… பவன் கல்யாண் பல்டி
பவன் கல்யாண் ஹைதராபாத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளிகையில் ஆந்திராவின் துணை முதல்வர் என்ற முறையில் பேசவில்லை, மாறாக ஒரு நடிகராகப் பேசுகிறேன் என்று தொடங்கினார்.
“இத்தனை ஆண்டுகளாக நான் எனது படங்களை விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்து வந்தது ஆணவத்தால் அல்ல. ஒரு திரைப்படத்தில் செய்யப்பட்ட பணிகளைப் பற்றிப் பேசுவதையும் அதை Promote பண்ணுவதையும் நான் சங்கடமாகக் காண்கிறேன்.
ஒரு படம் நன்றாக இருந்தால், அதை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் எந்த விளம்பரமும் ஒரு மோசமான படத்திற்கு உதவாது” என்று கூறினார். அவரது புதிய தெலுங்குப் படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 24 அன்று பல மொழிகளில் வெளியியாகிறது.
சமூகப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பற்றி விவாதிக்க பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு உரையாற்றியதாகவும், ஆனால் கடைசியாக ஒரு படத்திற்காக எப்போது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் என்பது அவருக்கு நினைவில் இல்லை என்று கூறினார்.
தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், 1990 களில் இருந்து தெலுங்கு மற்றும் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கிய ரத்னம் தயாரித்த படத்தில் பணியாற்ற விரும்பியதால் இந்த படத்தில் நடித்தேன்.
ரத்னம் ஒரு ஒப்பனை உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், சினிமாவில் படிப்படியாக வளர்ந்தார், ”. ஹரி ஹர வீர மல்லு என்பது கோல்கொண்டா சுல்தானகத்தை அவுரங்கசீப் ஆட்சி செய்த காலத்தில் நடந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம்.. ஏ. தயாகர் ராவ் தயாரித்த படத்தை ஏ.எம். ரத்னம் வழங்குகிறார்.
“இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி, ஒரு கதையுடன் எங்களை அணுகினார். கொரோனா காலத்தில் படம் தாமதங்களை சந்தித்தது, பின்னர் நான் எனது அரசியல் வாழ்க்கையில் மும்முரமாகிவிட்டேன். பல்வேறு காரணங்களால் கிரிஷ் பின்வாங்கிய போதிலும், இயக்குநராகப் பொறுப்பேற்ற ரத்னமும் ஜோதி கிருஷ்ணாவும் விடாமுயற்சியுடன் இருந்து படத்தை முடித்தார் என்று பவன் கல்யாண் கூறினார்.
ஹரி ஹர வீர மல்லு இரண்டு பகுதியாக வெளிவர இருக்கிறது, முதல் பாகத்தின் 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக செயல்பட்டது. “பல வருடங்களுக்கு முன்பு நான் செய்த அனைத்து தற்காப்பு கலை பயிற்சிகளும் பயனுள்ளதாக இருந்தன,” என்று கூறினார்.
ஔரங்கசீப்பை சித்தரிக்க பாபி தியோல் சரியான தேர்வு, மேலும் படத்தின் விளம்பரப் பணியை தனியாக மேற்கொண்டதற்காக கதாநாயகி நிதி அகர்வாலைப் பாராட்டினார்.
நான் சினிமாவில் போட்டித்தன்மையுடன் இருக்கவில்லை. ஆனால் சினிமாதான் எனக்கு உணவளித்தது, . எனவே நான் நடிப்பதை கைவிடவில்லை . ரீமேக் படங்கலில் நடிப்பதாக என்னை குறை சொல்லுகிறார்கள். ஆனால் ரீமேக் படங்கள் தான்’ கட்சியை நடத்துவதற்கும் ஆட்சி செய்வதிற்கும் நிதியளிகிறது என்று கூறினார்.


