in

காலி குடங்களுடன் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்

காலி குடங்களுடன் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மாதம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கஞ்சூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் இன்று செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அப்பொழுது அப்பகுதி மக்களிடம் செஞ்சிஒன்றியம் கிராம வளர்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் பிரபு சங்கர் என்பவர் பழங்குடி மக்களிடம் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே குடிநீர் வரவில்லை, நீங்கள் இங்கு வந்து குடிநீர் கேட்பதாக என்று அப்பகுதி மக்களிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பழங்குடிமக்கள் கிருஷ்ணகிரி To புதுச்சேரி நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய முற்பட்டனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த செஞ்சி காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து சாலை மறியலில் கைவிட்டு சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

What do you think?

ஆத்தூர்  ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் 57-ஆம் ஆண்டு திருவிழா பூக்குழி வழிபாடு

செயலிகள் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதால் பாமர மக்கள் பயணிகள் கடும் அவதி