டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றா ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து டி.என்.டி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என சமுதாய மக்களிடம் கோயிலில் சத்தியம் பெற்று தேர்தலில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என எச்சரிக்கை
டி.என்.டி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சீர் மரப்பினர் 68 சமுதாயத்திற்கும் “டிஎன்டி” என்ற ஒற்றைச் சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்மரபினர் சமுதாயத்திற்கு டி.என்.டி ஒற்றை சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் டிஎன்டி மக்களுக்கு ஒரே சான்றிதழ்
வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறிய முதலமைச்சர் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றவில்லை
2024 நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்க போவதாக கூறிய போது மீண்டும் ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என கூறிய நிலையில் தற்போது வரை அது செயல்படுத்தப்படாததால் சமுதாய மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
டிஎன்டி ஒற்றை சாதிச் சான்றிதழ் வழங்குவதாக ஏமாற்றி தங்கள் சமுதாய மக்களின் வாக்குகளை பெற்ற திமுகவிற்கு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என கோயிலில் எங்கள் சமுதாய மக்களிடம் சத்தியம் வாங்குவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஒற்றை சாதிச் சான்றிதழ் வழங்குவதாக கூறி ஏமாற்றிய திமுகவுக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என்று தெரிவித்தனர்


