in

மயிலாடுதுறை பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பதுங்கி இருந்த மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர்.

மயிலாடுதுறை பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பதுங்கி இருந்த மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர்.

 

மயிலாடுதுறை அருகே நீடூரில் பட்டப்பகலில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கடலூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த மூன்று பேரை காவல்துறை தனிபடையினர் கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் முகமது ஹாலிக் (36) என்பவரை கடந்த 24ஆம் தேதி மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் பட்டாகத்தியால் வெட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முகமது ஹாலிக் 25ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

முகமது ஹாலிக்கை வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஹாலிக்கை கொலை செய்த மேமாதூரைச் சேர்ந்த சரண்ராஜ் (28), ஆறுபாதியைச் சேர்ந்த விஜய் (28), தில்லையாடியைச் சேர்ந்த விஜயகாந்த் (20). ஆகிய மூவரை டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீசார் கடலூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

What do you think?

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே. என்.நேரு சாமி தரிசனம்.

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான அங்கூரம்