புதுச்சேரி..யில் August மாதத்தில் இருந்து திரைபடங்கள் வெளியிட போவதில்லை
அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் உள்ளூர் கேபிள் மற்றும் OTT தளங்களின் போட்டி காரணமாக ஏற்கனவே போராடி வரும் புதுச்சேரியின் சினிமா தியேட்டர்கள், தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு வரி குறைப்பின் விளைவாக மேலும் பாதிப்படையும்.
ஜிஎஸ்டி மற்றும் பொழுதுபோக்கு வரி போன்ற இரட்டை வரிவிதிப்பு முரண்பாடுகளால் தியேட்டர் வணிகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பொழுதுபோக்கு வரியை 8% இலிருந்து 4% ஆகக் குறைப்பது, 25% விகிதம் நிலவும் புதுச்சேரியில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல மாநிலங்கள்/உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரியை கணிசமாகக் குறைத்துள்ளன அல்லது நீக்கியுள்ளன என்றாலும், புதுச்சேரியில் 18% ஜிஎஸ்டி விதித்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அதிக பொழுதுபோக்கு வரி விகிதம் விதிப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த பத்தாண்டுகளில் 20 திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. பொழுதுபோக்கு வரியை நெறிபடுத்துவது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு அரசாங்கத்தின்னுடையது .
பல முறை Puducherry முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் சுமுகமான முடிவு எடுக்கப்படவில்லை அதனால் வரும் August மாதத்தில் இருந்து திரைப்படங்கலை புதுச்சேரி..யில் வெளியிட போவதில்லை என்று விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.


