மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியனின் ஜி எல் ஓ அமைப்பினால் 40 வது மே தினம் கொண்டாடப்பட்டது
மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியனின் ஜி எல் ஓ அமைப்பினால் 40 வது மே தினம் கொண்டாடப்பட்டது.
உழைப்பாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று மயிலாடுதுறையில் ஜி எல் ஓ அமைப்பின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் மே தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட திமுக கழக செயலாளர் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு விளக்க உரையாற்றி ஜி எல் ஓ கொடியை ஏற்றி வைத்தார்.சமீபத்தில் சட்டமன்றத்தில் 6 மருத்துவ கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் அமைய திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய வேண்டும் என்று ஒரு லட்ச அஞ்சல் கடிதங்களில் கோரிக்கை வைத்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜி எல் ஓ அலுவலகத்தில் பச்சைக்காளி பவளக்காளி வேடமணிந்து,இயல் இசை கலைக்குழுவினர் நடனமாடி மே தினத்தை கொண்டாடினர்.