மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகேஷ் பாபு
மகேஷ் பாபு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கான விளம்பரத்தில் மகேஷ் பாபு நடித்ததற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்நிறுவனம் போலியான மனைகளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், நிறுவனத்தின் நிலங்களில் ரூ.34.8 லட்சம் முதலீடு செய்தார், ஆனால் அங்கு உண்மையில் நிலங்கள் இல்லை என்று புகார் அளித்துள்ளார்.
மகேஷ் பாபு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் விளம்பரம் செய்ததால், இந்த புகாரில் மூன்றாவது பிரதிவாதியாக அவர் நடிகர் சேர்க்கபட்டிருக்கிறார்.
ரியல் எஸ்டேட் சர்ச்சையில் மகேஷ் பாபுவின் பெயர் வருவது இது முதல் முறை அல்ல. ஏப்ரல் 2024 இல், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) அவருக்கு சம்மன் அனுப்பியது.
இந்த நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்காக அவர் ரூ.5.9 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.
‘


