in

பாலாமடை கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

பாலாமடை கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

 

பாலாமடை கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு திருக்ல்யாணநிகழ்வு நேற்று இரவு வெகு சிமா்சையாக நடைபெற்றது. திரளாள பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை அக்ரஹாரத்தில் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மங்களாம்பிகா சமேத மங்களாங்குரேஸ்வரா் மற்றும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத ஸ்வாமி என தனித்தனி சன்னதிகள்அமைந்துள்ளது.

மேலும் மகான் நீலகண்ட தீட்சதர் அவர்களது அரிஷ்டானம் அமைந்துள்ளது. திருமணத்தடை குழந்தை பாக்கியம் என வேண்டுதல் பாிகார ஸ்தலமாக விளங்கும் இத் திருக்கோயிலுக்கு புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேம் நேற்று காலை வெகு விா்சையா நடைபெற்றது. மாலையில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வுகள் ஆரம்பமாயிற்று.

இதற்காக கோயில் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். உதயநோி ஸ்ரீவேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் இருந்து தங்கைக்கு கல்யாண சீா் வாிசைகள் மேள தாளங்களுடன் ஊா் மக்கள் எடுத்து வந்தனா். தொடா்ந்து மகா சங்கல்கம் நடைபெற்றது.

சுவாமி அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. கோத்ர பிரவாகம் கூறி தாரைவாா்த்தல் நடைபெற்று திலுமாங்கல்யதாரணம் நடைபெற்றது. அதனை தொடா்நது மாலை மாற்றுதல் மங்கல அட்சதை இடல் நடைபெற்று நட்சத்திர ஆரத்தி கற்பூர ஆரத்தி நடைபெற்றது.

சீா் கொண்டு வந்த பெருமாள் கோயில் டிரஸ்டிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது.அதனை தொடா்நது ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

What do you think?

பாண்டியன் ஸ்டோர் நடிகர் கொடுத்த குட் News

 ரெட்ரோ திரைப்படம் நான்கு நாட்களில் ₹43.48 கோடி வசூல்