in

நான் மோசடி செய்யவில்லை…அவர் தான் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ரிஹானா

நான் மோசடி செய்யவில்லை…அவர் தான் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ரிஹானா

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரிஹானா பேகம் ஹோட்டல் அதிபர் ராஜ் கண்ணன் என்பவரை 20 லட்சம் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த ரிஹானா Youtube சேனல் ..ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். நான் முதலில் ராஜ் கண்ணன்..னை சந்தித்தது என்னுடைய தோழியின் மூலம் தான் அப்போது அவர் NGO தொழில் தொடங்க இருப்பதாகவும் அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

இது பற்றி நாங்கள் காரில் பேசிக்கொண்டு சென்றபோது காரின் முன் சீட்டில் அவரது மோதிரத்தை போட்டு எனக்கு ப்ரபோஸ் செய்தார். இதனை பின்னாடி உட்கார்ந்து இருந்த அவருடைய வளர்ப்பு மகள் தியா வீடியோ எடுத்தார்.

இந்த மோதிரத்தை நீ கழட்டி விடக்கூடாது உன் போன்ற பெண் தான் எனக்கு தேவை நான் இத்தனை ஆண்டுகள் தனியாக வாழ்ந்து விட்டேன் உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் குடும்பமாக வாழ வேண்டும் என்று சொன்னார் நானும் ஆறு மாதம் டைம் வேணும் என்று கேட்டேன் என்னுடைய வீட்டின் அருகில் ஒரு வீடு விற்பனைக்கு வந்துள்ளதால் வீட்டை வாங்குவதற்கு நான் என்னுடைய நகைகளை பாங்கில் அடமானம் வைக்க சென்றேன்.

அதை தெரிந்து கொண்டு ராஜ் கண்ணன் பேங்கிற்கு வந்தார் பேங்க் வேலை முடிந்ததும் மீட்டிங் சென்றோம். அந்த மீட்டிங் …கில் லட்ச ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட் செய்தால் பெரிய தொகையை பார்க்கலாம் என்று இன்னொரு வருடன் பேசிக் கொண்டிருந்தார்.

சினிமாவை மட்டும் நம்பி என்னால் இருக்க முடியாது அதனால் நான் சேர்த்து வைத்துள்ள நகையை அடமானம் வைத்து அவரிடம் பணம் கொடுத்தேன் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

என்னை ப்ரொபோஸ் செய்தவர் ஏமாற்ற மாட்டார் என்று நம்பி கொடுத்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். எல்லாத்துக்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது. பைல்வான் கூறியது போல் நான் பெரிய பங்களாவில் எல்லாம் இல்லை சிறிய வீட்டில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

6 ஆயிரம் லிட்டர் கொள்முதல் அலுவலர் அதிகாரிகளுக்கு பாராட்டு

AK64…காக அஜித்குமார் வாங்கும் சம்பளம்