நாகை அருகே கருங்கண்ணியில் அரசு இடத்தில் சாலை அமைக்காமல் பட்டா இடத்தில் குடியிருக்கும் வீட்டை இடித்து சாலை அமைக்க முயற்சிக்கும் அதிகாரிகளால் தவிக்கும் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ்.இவர் சுமார் 40 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான வயலில் வீடு கட்டி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
இவர் வீட்டின் பின்புறத்தில் ரோஸ்லின், மிஸ்டிக்கா, விமலா, மூன்று குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அவர்கள் செல்வதற்கு சந்தனராஜ் தனது இடத்தில் நடைபாதைக்காக ஒன்றை அடி இடம் ஏற்கனவே கொடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ஆறு அடியில் சாலை அமைத்து வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் கீழ்வேளூர் வட்டாட்சியர் ஆய்வு செய்து அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்து தருவதாக உறுதி அளிக்காமல் ஒருதலைப் பட்சமாக ரோஸ்லின் குடும்பத்தினருக்கு சாதகமாக சந்தனராஜ் வீட்டை இடிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தினரை தொந்தரவு செய்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சந்தனராஜ் தனது குடும்பத்தோடு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இடம் பிரச்சனை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வருவாய்த் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு தனது வீட்டை இடிக்க வேண்டுமென தொந்தரவு செய்து வருவதாகவும். வீட்டை இடிக்காமல் அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.